×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகனை பார்க்க சென்றபோது பரிதாபம்.. தலை நசுங்கி கணவன் - மனைவி துடிதுடிக்க மரணம்.! நெஞ்சை உலுக்கும் துயரம்.!

மகனை பார்க்க சென்றபோது பரிதாபம்.. தலை நசுங்கி கணவன் - மனைவி துடிதுடிக்க மரணம்.! நெஞ்சை உலுக்கும் துயரம்.!

Advertisement

திருப்பூரில் வசிக்கும் மகனை பார்க்க தம்பதி புறப்பட்டு சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு, ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரபாணி (வயது 60). இவரின் மனைவி பஞ்சவர்ணம் (வயது 56). இவர்களின் மகன் ஜோதிபாசு, திருப்பூர் மாவட்டத்தில் தனது குடுமபத்துடன் இருக்கிறார். இந்நிலையில், சங்கரபாணி - பஞ்சவர்ணம் தம்பதி இன்று அதிகாலை நேரத்தில், தங்களின் இருசக்கர வானத்தில் மகனை பார்க்க திருப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். 

அப்போது, செம்பட்டி அருகேயுள்ள புல்வெட்டிகுளம் பகுதியில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், தம்பதிகள் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், அடையாளம் தெரியாத வாகனத்திற்கு பின்னால் வந்த வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக செம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அடையாளம் தெரியாத வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிகழ்வின் போது, உயிரிழந்தவர்களின் உடலை வேடிக்கை பார்த்தவர்கள் தூக்கி அவசர ஊர்தியில் வைக்க கூட முன்வரவில்லை. காவல் ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் உதவி ஆய்வாளர் நாராயணன் சேர்ந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #couple #death #accident #police #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story