மனைவி, மகள் கொலை.. திமுக பிரமுகர் தற்கொலை.. கடன் தொல்லையால் விபரீதம்.. மனதை உலுக்கும் பின்னணி.!
Dharmapuri News: கடன் பிரச்சனையில் திமுக பிரமுகர் விபரீத முடிவு எடுத்துள்ளார்.
லாரியின் குறுக்கே பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அதிர்ச்சி திருப்பம் வெளியாகியுள்ளது. திமுக பிரமுகர் தற்கொலை பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பிரமுகர்:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அத்தியமான்கோட்டை, முண்டாசுபுறவடை கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, அவர் தர்மபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 45) என்பது தெரியவந்தது. திமுக எம்.பி. செந்தில் குமாரிடம் உதவியாளராக இருந்தவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இவரின் மனைவி சரண்யா (வயது 36). மகள் சாத்விகா (வயது 14). இவர்கள் அனைவரும் தர்மபுரி கோட்டை கோயில் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: வாயில் துணிவைத்து கழுத்து நெரித்து 10 வயது மகள் கொலை.. தமிழ்நாட்டில் இப்படி ஒரு கொடுமையா? பயங்கரம்.!
அதிர்ச்சி காட்சி:
சந்தோஷின் மரணம் குறித்த தகவலை தெரிவிக்க அவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீடு பூட்டி இருந்தது. வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்டு டிவி சத்தம் அதிகமாக கேட்டது. இதனால் சந்தேகத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சரண்யா, சாத்விகா ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்துள்ளனர். இவர்களின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபரீத முடிவு:
விசாரணையில், சந்தோஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை முதலீட்டிலும் போதிய வருமானம் இல்லை. இதனால் குடும்பத்தை நடத்த கடன் வாங்கத் தொடங்கி பின் கஷ்டத்தில் சிக்கி இருக்கிறார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டவர் மனைவி, மகளை சுத்தியால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். பின் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்று லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
வீடியோ:
தற்கொலைக்கு முன்னதாக சந்தோஷ் பதிவு செய்த வீடியோவில், "நான் யாரையும் ஏமாற்றவில்லை. மனைவி, மகளை மகாராணி போல வைத்திருந்தேன். அவர்கள் வசதியாக இருந்துவிட்டார்கள். இதற்குமேல் அவர்களை கஷ்டப்படுத்த இயலாது. அவர்களை நான் கொலை செய்யவில்லை, என்னுடன் கூட்டிச் செல்கிறேன். எண்களின் மரணத்துக்கு கடன் காரணம். நானும் இறந்துவிடுவேன். மன்னித்துவிடுங்கள்" என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நபரின் இறுதி நொடிகள்:
இதையும் படிங்க: காதல் திருமணத்துக்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை.. நெஞ்சில் குத்திய மகன்.. கொட்டகைக்குள் மருமகன் கண்ட அதிர்ச்சி காட்சி.!