தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 பேர் கும்பலால் பெண் கூட்டுபலாத்கார வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. நிலப்பிரச்சனைக்காக நடந்த பயங்கரம்.!

5 பேர் கும்பலால் பெண் கூட்டுபலாத்கார வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. நிலப்பிரச்சனைக்காக நடந்த பயங்கரம்.!

Delhi 5 Man Gang Rape Case Fake Complaint by Woman due to Land Dispute Advertisement

 

நிலப்பிரச்சனையில்  பேரை சிக்க வைக்க பெண்மணி அளித்த பலாத்கார புகாரில் பகீர் உண்மை அம்பலமாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்த 36 வயது இளம்பெண், தன்னை 5 பேர் கும்பல் கடத்தி வைத்து 2 நாட்களாக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை சொருகி, கை-கால்களை கட்டிப்போட்டு கொடுமை செய்ததாகவும் பரபரப்பு புகார் அளித்தார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேர் கும்பலை கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான வாக்குமூலம் கிடைக்கப்பெறவில்லை. மருத்துவ பரிசோதனையில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்ற முடிவுகள் வந்துள்ளன.

delhi

இதனால் அதிகாரிகள் விசாரணையை பெண்ணின் பக்கம் திருப்பிய சமயத்தில், அவர் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து நிலப்பிரச்சனையில் 5 பேரை சிக்க வைக்க கூட்டுப்பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார் அளித்தது அம்பலமானது. நிலப்பிரச்சனை விவகாரத்தை கற்பழிப்பு குற்றச்சாட்டாக மாற்ற உள்ளூரை சேர்ந்த செய்தியாளருக்கு ரூ.5 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பெண்ணின் மீது வழக்குப்பதிந்த காவல் துறையினர், அவரது கூட்டாளிகளான 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர். நிலப்பிரச்னைக்காக பெண்மணி கொடூரமாக கூட்டுப்பாலியல் பலாத்கார புகார் அளித்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #gang rape #complaint #police #India #டெல்லி #கூட்டுப்பாலியல் பலாத்காரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story