×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படியில் பயணம் நொடியில் மரணம்.. திருவண்ணாமலை அருகே சோகம்..!

படியில் பயணம் நொடியில் மரணம்.. திருவண்ணாமலை அருகே சோகம்..!

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் புதூர் அருகே உள்ள மலமஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசு பேருந்தில் படியில் நின்றவாறு பயணம் செய்துள்ளார்.

அப்போது பேருந்தானது கந்திகுப்பம் அருகே செந்தாரப்பள்ளி பிரிவு சாலையில் சென்றபோது திடீரென்று யாரும் எதிர்பாராதவிதமாக அன்பு பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் அன்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#death #Moment of travel #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story