×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Govt Schemes: ரூ.10 லட்சம் வரை கடன்.. பெண்களுக்கு ஜாக்பாட்... முழு விபரம் இதோ.!

கிராமப்புற பெண்களுக்கு ரூ. 10 லட்சம் வரை உத்தரவாதமில்லா கடன் வழங்கப்படுகிறது. 

Advertisement

DAY-NRLM திட்டத்தின் வாய்ப்புகள் மூலம் பெண்களின் பொருளாதாரம் & நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய அரசு கடன் வழங்குகிறது.

மத்திய அரசின் திட்டம்:

மத்திய அரசின் கிராம வளர்ச்சி அமைச்சகம் செயல்படுத்தும் தீன்தயாள் ஆண்டியோதய யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) கிராமப்புற ஏழ்மையை குறைக்கும் முக்கியத் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 8 முதல் 10 கோடி கிராமப்புற ஏழை குடும்பங்களை சுய உதவி குழுக்களாக (Self Help Groups) ஒருங்கிணைக்கப்படுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பெண்களுக்கு நீண்டகால ஆதரவு, நிதி சேவைகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு உறுதி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: TN Govt Schemes: ரூ.1.20 இலட்சம் மானியம் கொடுக்கும் தமிழக அரசு.. யார் விண்ணப்பிக்கலாம்? விதிமுறைகள் என்ன?

கடன் தகுதி எப்படி?

DAY-NRLM திட்டத்தின் கீழ், பெண்கள் சுயதொழில், விவசாயம் சார்ந்த தொழில்கள் மற்றும் சிறு வணிகங்களை வளர்க்க உதவும் பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. கடன் பெறும் சுய உதவி குழுக்கள் குறைந்தது 6 மாதங்களாக செயல்பட்டு, முறையான கூட்டங்கள், சேமிப்பு, உள்கடன், நேர்மையான திருப்பிச் செலுத்தல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கணக்கு புத்தகங்கள் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். பழைய குழுக்களும் 3 மாதம் தொடர்ச்சியாக செயல்பட்டால் கடன் பெறக்கூடிய தகுதி பெற முடியும்.

வட்டியிலும் சலுகை:

NABARD அடிப்படையில், சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. நாட்டில் அடையாளம் காணப்பட்ட 250 பின்தங்கிய மாவட்டங்களில், பெண்கள் குழுக்களுக்கு ₹3 லட்சம் வரை 7% வட்டியில் வங்கி கடன் வழங்கப்படுகிறது. நேர்மையாக கடன் திருப்பிச் செலுத்தும் குழுக்களுக்கு கூடுதலாக 3% வட்டி சலுகை வழங்கப்படுவதால் மொத்த வட்டி விகிதம் 4% ஆக குறைக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வங்கியின் வழக்கமான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் நல்ல திருப்பிச் செலுத்தல் இருந்தால் 7% வரை வட்டி சலுகை மாநில அரசுகள் மூலம் வழங்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் வரை கடன்:

DAY-NRLM திட்டத்தின் கீழ் ₹10 லட்சம் வரை எந்த உத்தரவாதமும் (Collateral) தேவையில்லை. இதன் மூலம் கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாடு, நம்பிக்கை மற்றும் நிலையான வாழ்வாதாரம் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு 2012-13 ஆம் ஆண்டு முதல், மத்திய மற்றும் மாநில அரசின் 60:40 நிதி பகிர்வு அடிப்படையில் DAY-NRLM திட்டத்தை மாநில ஊரக வாழ்வாதார இயக்கமாக செயல்படுத்தி வருகிறது. இது பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்குகிறது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Central Government #DAY NRLM Scheme #10 லட்சம் கடன் #மத்திய அரசு #சுயஉதவி குழுக்கள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story