×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென தூக்கில் தொங்கிய நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர்! அதிர்ச்சி சம்பவம்!!

dancer commit suicide

Advertisement

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் சினிமாவில் மட்டுமின்றி தனது நிஜ வாழ்க்கையிலும் மனிதநேயமிக்க ஒரு ஹீரோவாக உள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

ராகவா லாரன்ஸின் உதவியாளர் பரத் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களோடு சேர்ந்து வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் குழந்தைகள் உள்பட பல திரையுலக பிரபலங்களின் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

பரத்திற்கு திருமணம் ஆகாத நிலையில், நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் பரத். சினிமா தான் வாழ்க்கை என்றிருந்த அவருக்கு சினிமாவில் எதுவும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் கூட தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது நடப்பு வட்டாரங்களால் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் ஹோடர்பாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ragava lawrence #assistant #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story