×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது.! எதற்கெல்லாம் அனுமதி.?

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத

Advertisement

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருந்தது.

இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, ஜூன் 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. 

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் நோய் தொற்று பரவலை தடுக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை, வணிக வளாகங்கள், திரையரங்குகள் இயங்குவதற்கான தடை நீடிக்கப்படுகிறது. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான தடையும் நீடிக்கிறது. சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகளுக்கான தடையும் நீடிக்கிறது. திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். இறப்பு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. 

இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் இயக்க அனுமதி. ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி. வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.  டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. கூரியர் உள்ளிட்ட தபால் சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lock down #relaxations
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story