×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: கார் ஓட்டுனரின் அலட்சியத்தால், 6 நொடிகளில் துள்ளத்துடிக்க பறிபோன 3 உயிர்கள்., பரிதவிப்பில் 30 உயிர்கள்..! பேருந்து சிசிடிவி-யில் அதிர்ச்சி திருப்பம்..! கடலூரில் பெரும் சோகம்.!

#Breaking: கார் ஓட்டுனரின் அலட்சியத்தால் துள்ளத்துடிக்க 3 பறிபோன உயிர்கள்.! சிசிடிவி கேமிராவில் அம்பலமான உண்மை..! கடலூரில் பெரும் சோகம்.!

Advertisement

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர், ஆண்டிகுப்பம் பகுதியில் இன்று மாலை சௌமியா என்ற தனியார் பேருந்து விபத்திற்குள்ளானது. பேருந்து சாலையில் பயணம் செய்தபோது, எதிர்திசையில் வந்த கார் பேருந்தின் மீது முதலில் மோதியுள்ளது. 

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்திசை சாலையோரம் சென்றது. ஆனால், பேருந்து தறிகெட்டு வருவதை கண்டு அதிர்ந்த இருசக்கர வாகன ஒட்டி தப்பிக்க எண்ணி தனது இடப்புறம் வாகனத்தை கீழே போட்டார். 

ஆனால், பேருந்து அவர்களின் மீது நேரடியாக மோதி, சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து சில நொடிக்குள் நடந்து முடிந்தது. 

கார் ஓட்டுநர் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்திச்செல்ல முயன்றதே விபத்திற்கு காரணமாக அமைந்தது பேருந்தின் சிசிடிவி கேமிரா காட்சிகள் வாயிலாக உறுதியாகியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர். 

காரில் பயணம் செய்த ஒருவர் என 3 பேர் பலியான நிலையில், படுகாயமடைந்த 30 பயணிகள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். தனியார் பேருந்து கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #accident #death #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story