தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் திருமணம் செய்த மகளை, காதலனுடன் கடத்திய திமுக பிரமுகர்.. காதல் ஜோடியின் நிலை என்ன?.. இளைஞனின் தாய் கதறல்.!

காதல் திருமணம் செய்த மகளை, காதலனுடன் கடத்திய திமுக பிரமுகர்.. காதல் ஜோடியின் நிலை என்ன?.. இளைஞனின் தாய் கதறல்.!

Cuddalore Kurinjipadi DMK Supporter Kidnap Love Married Couple at Marakkanam Advertisement

திமுக பிரமுகரின் மகளான கல்லூரி மாணவியை இளைஞர் காதலித்து கரம்பிடித்த நிலையில், காதல் ஜோடியை திமுக பிரமுகர் கடத்திவிட்டதாக இளைஞனின் தாய் புகார் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, பச்சாரப்பாளையம் நடுத்தெருவில் வசித்து வருபவர் தனஜெயன். இவரின் மனைவி பாக்கியம் (வயது 48). இவர் தனது உறவினருடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், 

"எனது மகன் தாமரைக்கண்ணன் (வயது 23). இவர் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். எங்கள் ஊரை சேர்ந்த திமுக பிரமுகர் அருள் முருகனின் மகள் மகாலட்சுமி (வயது 20). மகாலட்சுமி திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.கால் பயின்று வருகிறார். 

Cuddalore

மகன் தாமரைக்கண்ணனும் - மகாலட்சுமியும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பின்னர் சென்னையில் உள்ள பாஜக பிரமுகரிடம் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், நேற்று முன்தினம் ஊருக்கு வர அனைவரும் புறப்பட்டனர். 

இவர்கள் மரக்காணம் அருகே வருகையில் அருள் முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் காரை இடைமறித்து காதல் ஜோடியை கடத்தி சென்றுவிட்டனர். அவர்களை உடனடியாக மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #Kurinjipadi #Marakkanam #DMK Worker #kidnap #Love #daughter
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story