அதிர்ச்சியில் உறையும் கோவை மக்கள்.. கலர் கலராக மாறிய நீர்.!
அதிர்ச்சியில் உரையும் கோவை மக்கள்.. கலர் கலராக மாறிய நீர்.!
நேற்று இரவு கோயமுத்தூரில் பலத்த மழை பெய்ததால், அந்த மழை நீரோடு, சாயப்பட்டறையிலிருந்த கழிவுகளும் சேர்ந்துள்ளது. இதனால், ஆற்று பாலம் சுண்ணாம்பு காளவாயில், தண்ணீர் போகும் வழியில் நுரை பெருக்கெடுத்து ஓடியது.
கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், வேளாண்மை பல்கலைக்கழகம் பகுதியில், 5.2 சென்டிமீட்டர், தொண்டாமுத்தூரில் 5.9 சென்டிமீட்டர், கோவை தெற்கு பகுதியில் 5.6 சென்டிமீட்டர், கோவை பீளமேடு பகுதியில் 6.1 சென்டிமீட்டர் என்ற அளவுகளில் மழை பெய்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, காலைவேளையில் வானம் மேகமூட்டத்தோடு காணப்படுவதுடன், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.