×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி!! ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து!! கோவையில் பரபரப்பு

கோவையில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

கோவையில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். அம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்ததும், கொரோனா நோயாளி ஆம்புலன்சில் இருந்து இரங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை அழைத்துவந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனையின் வெளியே நின்றுகொண்டிருந்தபோது, திடீரென ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலின்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீப்பற்றியுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதும் ஏற்ப்படவில்லை. அருகில் இருந்த சிலருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story