×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீமான் என்றால் இளக்காரமா.? வெகுண்டெழுந்த நீதிபதி.. பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

சீமான் என்றால் இளக்காரமா.? வெகுண்டெழுந்த நீதிபதி.. பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

Advertisement

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், தமிழன் கோகுல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை அமர்வு உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி உத்தரவிட்டுள்ளார். அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையின்போது, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்எல்ஏ மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுத்த நிலையில், சீமான் குறித்து அவதூறாக பேசப்பட்ட புகாரில் ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், சீமான் தவிர்க்க முடியாத அரசியல் கட்சித் தலைவர் என்றும், எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அவரைப் பற்றி அசிங்கமாகவோ அல்லது அவதூறாகவோ பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்றும் நீதிபதி விக்டோரியா கௌரி தெரிவித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பனையூர் பாபுவால் வெடித்த புது பூகம்பம்... முதல்வர் விஜய் மற்றும் வைகோவை உடனே கைது பண்ணுங்க! அரசியல் வட்டாரத்தில் அடுத்த பரபரப்பு.!!!

இதனையடுத்து, தமிழன் கோகுல் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன.

இதையும் படிங்க: உடனடி நீக்கம்.. அமைச்சர் N.ஆனந்தின் அதிரடி எச்சரிக்கையால் அலறும் முக்கிய புள்ளிகள்! கறாராக கண்டிஷன் போட்ட CM விஜய்.....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #NTK #MaduraiCourt #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story