ஒரே வீட்டில் வேறு வேறு அறையில் கணவன் மனைவி இருவரும்! அந்தக் கோலத்தில் பார்த்து உறைந்து போன உறவினர்கள்! அனாதையான நிலையில் கதறும் 3 குழந்தைகள்! சிவகங்கையில் நடந்த அதிர்ச்சி!
ஒரே வீட்டில் வேறு வேறு அறையில் கணவன் மனைவி இருவரும்! அந்தக் கோலத்தில் கண்டு கலங்கிய உறவினர்கள்! அனாதையான நிலையில் கதறும் 3 குழந்தைகள்! சிவகங்கையில் நடந்த அதிர்ச்சி!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நயினார் பேட்டை பகுதியில் சோகமான தற்கொலை சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த ஆறுமுகம் (35) மற்றும் ரேவதி (32) தம்பதியினருக்கு ஜனனி (11), வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆறுமுகம் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. நேற்று குழந்தைகள் பள்ளிக்கு சென்றபின், உறவினர்கள் வீட்டிற்கு சென்ற போது கதவு திறந்த நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் இருவரும் வெவ்வேறு அறைகளில் தூக்கில் தொங்கும் நிலையில் காணப்பட்டனர்.
உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் இருவரும் உயிரிழந்தனர் என மருத்துவர்கள் உறுதிபடுத்தினர். காவல்துறை விசாரணையில், இருவரும் குடும்ப தகராறின் காரணமாக தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் தந்தையை இழந்த குழந்தைகள், பரிதாபகரமான நிலைமையில் உள்ளனர்.
இதையும் படிங்க: தலைக்கேறிய மது போதை! 2 வாலிபர்களுடன் ஒரே அறையில் இருந்த இளம்பெண்கள்! கண்விழித்துப் பார்த்த போது நடந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்...