தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

300 ஐ தாண்டிய மஹாராஷ்டிரா..! மூன்றாவது இடத்தில் தமிழகம்.! நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.!

Corono positive cases in india state wise

Corono positive cases in india state wise Advertisement

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த  மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக கேரளா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 1965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corono

இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 335 ஆக உள்ள நிலையில், அம்மாநிலம் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது. 265 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனா பயம் சற்று குறைவாக இருந்த தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசு இன்று அறிவித்துள்ளது. 234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது தமிழகம்.

இதற்கு அடுத்தபடியாக, டெல்லி (152), கர்நாடகா (110), ராஜஸ்தான் (108) போன்ற மாநிலங்கள் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #tamil nadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story