×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதி! ஒன்றாக கபடி விளையாடி மகிழ்ந்த வாலிபர்கள்! வைரலான வீடியோவால் பரபரப்பு!

Corono affected people play kabadi in chidamparam

Advertisement

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் மக்களுக்கு தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் பயன்படுத்த வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலும் கொரோனா அசுரவேகத்தில் பரவியநிலையில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  கடலூர், விருத்தாசலம் மருத்துவமனைகள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள சிறப்பு வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 150க்கும் மேற்பட்டவர்கள்  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்லி விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கோல்டன் ஜூப்லி விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் சிலர் நேற்று முன்தினம் மாலை, விடுதியின் மொட்டை மாடிக்கு சென்று ஒன்றாக கபடி விளையாடிய  வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சிதம்பரம் வட்டாட்சியர் கபடி விளையாட்டில் ஈடுபட்டவர்களை எச்சரித்துள்ளார் எனவும், மொட்டை மாடி கதவு மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chidamparam #corono
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story