சென்னையில் எங்கு கொரோனா பாதிப்பு அதிகம்! மண்டலம் வாரியாக வெளியான தகவல்!
Corono affected people detail in chennai
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 1323 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் 15பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னையிலேயே அதிக அளவில் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 11 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதித்தவர்களின் பட்டியலை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இவற்றில் திருவொற்றியூரில்6 மாதவரத்தில் 3, தண்டையார்பேட்டையில் 20 ராயபுரத்தில் 73, திருவிக நகரில் 33, அண்ணா நகரில் 24, தேனாம்பேட்டையில் 19, கோடம்பாக்கத்தில் 26, வளசரவாக்கத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆலந்தூரில் 3, அடையாறு மற்றும் பெருங்குடியில் 7, சோழிங்கநல்லூரில் இருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.