×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் இன்றுமட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பு மற்றும் பலி? மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Corona Virus latest update in Chennai and Tamil Nadu

Advertisement

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து அன்றாட பாதிப்பு நிலவரம் மற்றும் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8811 ஆக உயர்ந்துள்ளது. அதில் இன்று மட்டும் 60 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

இன்று சற்று ஆறுதலாக 5206 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 479 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய தேதியில் 51 ஆயிரத்து 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #tamil nadu #Live Update
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story