தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகம் வந்தடைந்த கொரோனா விரைவு பரிசோதனைக்கான கிட்கள்! மத்திய அரசு அதிரடி!

Corona test kit arrived tamilnadu

corona-test-kit-arrived-tamilnadu Advertisement

கொரோனா நோய் பரவல் குறித்த அதிவிரைவு பரிசோதனைக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட 12 ஆயிரம் ராபிட் பரிசோதனை கிட்கள் (rapid kits) தமிழகம் வந்தடைந்தன.

இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை இன்று வரை 480 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு பற்றி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் உடனடியாக முடிவுகள் தெரிவதற்கு போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவில் இல்லை என்பதால் உபகரணங்கள் வாங்குவதற்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்திருந்தது.

corona

இந்தநிலையில், கொரோனா பரிசோதனைக்கு தேவையான 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள், சீனாவின் குவாங்சூ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றில் கொரோனா பரிசோதனைக்கான மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட 12 ஆயிரம் ராபிட் பரிசோதனை கிட்கள் (rapid kits) தமிழகம் வந்தடைந்தன.  இந்த ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் மூலம் கொரோனா சோதனை முடிவுகளை விரைவாக அறிய முடியும்.

தமிழக அரசு அவற்றை அங்கிருந்து பொது சுகாதார இயக்குநரகம் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #Test kit
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story