×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்னமும் குறையாத கொரோனா! மறையாத மரணங்கள்! இன்றைய பாதிப்பு மற்றும் இறப்பு விவரம்.

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 5,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 65 பேர் இன்று உயிரிழந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 5,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 65 பேர் இன்று உயிரிழந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 5,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,250 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,56,385 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,252 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 5,005 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,02,038 ஆக உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #corona chennai update #corona tamil nadu count
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story