×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் தற்போதைய கொரோனா நிலவரம்.! சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு.?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,009 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,14,170 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 10பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,096 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 1,091 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,93,154 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story