தமிழகத்தில் டந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்து மத்தி
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,48,064 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 5,445 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.