×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Corona increased in tamilnadu

Advertisement

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக  5,980பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,73,410ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும்  1,294  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  

 தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும்  80 பேர் உயிரிழந்துள்ளநிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து  5603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story