×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? சென்னையில் மட்டும் 18 பேர் பலி!

corona increased in tamilnadu

Advertisement

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் தீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தில், இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #increased #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story