தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

corona contact number

corona contact number Advertisement

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் தீவிரமாக பரவி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவிற்கு 3 பேர் பலியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் 152 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அணைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

corona

தமிழகத்தில் சுகாதாரத்துறை கடும் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில், ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அந்த நபர் டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்தடைந்ததாகவும், அவர் தற்போது நல்ல நிலைமையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பொதுமக்களிடம் இருந்து வரும் தகவல்கள் மற்றும் புகார்களை 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அதற்கு ஏதுவாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு உடனடியா நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி கூறுகையில், பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 , தொலைபேசி எண்:04425243454 மற்றும் வாட்ஸ் ஆப் எண்:9384056232 என்ற எண்ணிற்கு புகார் மற்றும் தகவல் அனுப்பினால், சம்பந்தப்பட்டதுறைக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #virus
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story