தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் ஒரு படுகொலை! கொலை களமாக மாறுகிறதா தமிழகம்.!

continusly murder in tamilnadu

continusly-murder-in-tamilnadu Advertisement

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன் தனது மனைவி சங்கீதாவை கொடூரமாக கொலை செய்து அவரது உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி எடுத்து குப்பைமேட்டில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பாமக முன்னாள் நகரச் செயலாளரான வ.ராமலிங்கம்(45), கடந்த 5-ம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலரால் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

murder case

காந்திநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்குமார்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

காலை அவர் வீட்டருகே இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து பலியானார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#murder case #chennai #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story