×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு... அவசரமாக தரையிறங்கிய சார்ஜா விமானம்... அதிர்ச்சியில் பயணிகள்.!

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு... அவசரமாக தரையிறங்கிய சார்ஜா விமானம்... அதிர்ச்சியில் பயணிகள்.!

Advertisement

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சென்னை திருச்சி மதுரை மற்றும் கோவை ஆகியவை சர்வதேச விமான நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மற்றும் சார்ஜா  ஆகிய நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இதில் ஐக்கிய அரபு நாடான ஷார்ஜாவிற்கு வாரத்தில் ஐந்து நாட்களும் சிங்கப்பூருக்கு தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோயம்புத்தூரில் விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு விமானம் புறப்பட்டு சென்றது.

இதில் விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் உட்பட 170 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவையின் தாக்குதலுக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி தரையிறக்க  அனுமதி கூறினார்.

அந்த விமானம் ஆனது உடனடியாக கோயம்புத்தூரில் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . விமானியின் துரிதமான நடவடிக்கையால் மிகப்பெரிய  அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Coimbatore #airport #eergencylanding #passengerssaved
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story