×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிரடியாக ரூ.134 குறைந்த குறைந்த வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை.!

அதிரடியாக ரூ.134 குறைந்த குறைந்த வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை.!

Advertisement

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2,373க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.

இந்தநிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன.

அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 134 ரூபாய் குறைக்கப்பட்டு 2373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று 1018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#comercial cylinder #price decreased
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story