நாமகல்லில் பயங்கரம்...19 வயது இளைஞர் கொலை.!! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!!
நாமகல்லில் பயங்கரம்...19 வயது இளைஞர் கொலை.!! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!!
நாமக்கல்லில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 3 தனிப்படை அதிகாரிகள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை நாமக்கல் நகரில் தொழிலதிபர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான முல்லை நகரில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் நகர காவல் துறை கண்காணிப்பாளர் விமலா மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் கொலை நடந்த இடத்தில் ஆய்வு நடத்திய காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இது தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் கணபதி நகர் நகர்ப்புற மேம்பாட்டு குடியிருப்பை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் மனோ(19) என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அதிர்ச்சி... நிதி நிறுவன ஊழியர் கடத்தி கொலை.!! பின்னணி என்ன.?
மேலும் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் பற்றி இதுவரை துப்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிப்பதற்காக நாமக்கல் நகர காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 3 தனிப்படைகளை காவல்துறை அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனிப்படை அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். நாமக்கல் நகரில் தொழிலதிபர்கள் வாழும் பகுதியில் நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: நாமக்கலில் பயங்கரம்... வடமாநில இளைஞர்கள் படுகொலை.!! குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.!!