அடக்கடவுளே.. ஜாலியாக கடலில் குளிக்க சென்ற கல்லூரி நண்பர்கள்.! கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பெருந்துயரம்.!
அடக்கடவுளே.. நண்பர்களுடன் ஜாலியாக கடலில் குளிக்க சென்ற நண்பர்கள்.! கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பெருந்துயரம்.!
சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார். இவரது மகன் ரோஷன். 20 வயது நிறைந்த இவர், ஆவடியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரோஷன் நேற்று மதியம் தன்னுடன் கல்லூரியில் படித்து வரும் 21 வயது நிறைந்த ஷியான் என்ற நண்பருடன் எண்ணூர் காமராஜ் நகரில் வசித்து வரும் ரெனால்டோ என்பவரை சந்திக்க சென்றுள்ளார்.
பின்னர் அவர்கள் மூன்று பேரும் எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் கடலில் ஜாலியாக குளிக்க சென்றுள்ளனர். அங்கு அவர்கள் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை வந்து அவர்கள் மூவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனை அங்கு வலைபின்னிக்கொண்டிருந்த மீனவர்கள் கண்டு பதறி போயுள்ளனர். பின் உடனே கடலில் குதித்து ரெனால்டோ மற்றும் ஷியான் இருவரையும் மீட்டு கரைக்கு தூக்கி வந்துள்ளனர். ஆனால் ரோஷனை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து ரெனால்டோ மற்றும் ஷியான் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு ரோஷனை பிணமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.