×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏற்கனவே கீதாவுக்கு 3 திருமணம்..! இப்போ 4-வதாக கதிரவனுடன் கள்ளத்தொடர்பு! நகை, பணம் தகராறில் ஜெயிலுக்கு அனுப்பி ஜாமீனில் எடுத்த கீதாவுக்கு இறுதியில் நடந்த பயங்கரம்! பகீர் சம்பவம்..!!!

கோவை கணபதியைச் சேர்ந்த கீதாவை நகை, பணப் பிரச்சனையில் குடிமங்கலம் அருகே வாய்க்காலில் தள்ளிக் கொன்றதாக கதிரவன் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

நகை மற்றும் பணப் பிரச்சனையில் கோவை கணபதியைச் சேர்ந்த 40 வயது கீதா, திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் தள்ளிக் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் பழக்கத்தில் இருந்த கதிரவன் என்பவர், விபத்து போல நாடகமாடியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, கதிரவனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை, பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த கீதாவுக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்ற நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் கதிரவனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். கதிரவனுக்கு கீதா அடிக்கடி பணம் மற்றும் தங்க நகைகளை கொடுத்து உதவியுள்ளார். ஆனால், வாங்கிய நகைகளை திருப்பித் தராததால் இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்! சிசிடிவி இல்லாத சின்ன கிராமத்தில் சத்தமில்லாமல் நடந்த மர்மம்... செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் திகைத்து நிற்கும் சிபிசிஐடி..!!!

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால், கீதா ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கதிரவன் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கீதாவே அவரை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். ஆனாலும், நகை மற்றும் பணம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து வந்துள்ளது.

வாய்க்காலில் தள்ளி கொலை செய்ததாக சந்தேகம்

நகைகளைத் திருப்பித் தருமாறு கீதா தொடர்ந்து வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த கதிரவன், தனது நண்பரான சூலூரைச் சேர்ந்த சண்முக வடிவேலுடன் சேர்ந்து கொலை செய்யத் திட்டமிட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். நகைகளைத் திருப்பித் தருவதாகக் கூறி, திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே கிருபாகரன் தென்னந்தோப்புப் பகுதிக்கு கீதாவை அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கதிரவன் கீதாவை அருகிலிருந்த பி.ஏ.பி. வாய்க்காலில் தள்ளியுள்ளார். நீரில் மூழ்கிய கீதா உயிரிழந்தார். பின்னர், அவர் தவறி வாய்க்காலில் விழுந்துவிட்டதாகக் கூறி கதிரவன் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட கீதா பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கதிரவனிடம் போலீசார் தீவிர விசாரணை

கீதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், திருப்பூர் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்த குடிமங்கலம் போலீசார், கதிரவனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்தக் கொலைத் திட்டத்தில் கதிரவனின் நண்பர் சண்முக வடிவேலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: கிராம திருவிழாவில் மாயமான 7 வயது சிறுமி! இரவு முழுவதும் தேடி அலைந்த பெற்றோர்... காலையில் ஆலமரத்தின் பொந்துக்குள் கிடந்த சிறுமியின் சடலம்! வெளிச்சத்துக்கு வந்த பகீர் பின்னணி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கீதா கொலை #குடிமங்கலம் #Coimbatore Crime #Canal Murder #திருப்பூர் போலீஸ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story