திருநங்கையிடம் உல்லாசமாக இருந்தவர் இரத்த வெள்ளத்தில் மிதந்து பலி.. வழிந்தோடிய இரத்தத்தால் கதறல்., பதறவைக்கும் சம்பவம்.!
திருநங்கையிடம் உல்லாசமாக இருந்தவர் இரத்த வெள்ளத்தில் மிதந்து பலி.. வழிந்தோடிய இரத்தத்தால் கதறல்., பதறவைக்கும் சம்பவம்.!

இரவு நேரத்தில் திருநங்கையிடம் உல்லாசமாக இருக்க சென்றவர் மூர்க்கத்தனமாக செயல்பட்டதால் இறுதியில் இளைஞருக்கு மரணம் பரிசான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் துடியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். கடந்த 8 ஆம் தேதி பணிக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
மேலும், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் காவல் துறையினர் தர்மலிங்கத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த பதில்கள் காவல் துறையினருக்கு சந்தேகத்தை கிளப்பியதால், அவரிடம் தீவிர விசாரணை நடந்துள்ளது.
விசாரணையில், தர்மலிங்கம் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் ஒருவர் என இருவரும் இச்சையை தீர்க்க விபச்சார திருநங்கையிடம் உல்லாசமாக இருக்க சென்றுள்ளனர். அப்போது, தர்மலிங்கத்தின் மூர்க்கத்தன செயல்பாட்டின் காரணமாக, அறுவை சிகிச்சை செய்த திருநங்கையின் மார்பில் இருந்து இரத்தம் வெளியேறியுள்ளது.
இதனால் வலி பொறுக்க இயலாமல் திருநங்கை ரேஸ்மிகா அலறவே, அருகே இருந்த திருநங்கைகள் ஒன்றிணைந்து தர்மலிங்கம் மற்றும் அவரின் நண்பரை தாக்கியுள்ளனர். இதில், நண்பர் ஓடிவிட சிக்கிய தர்மலிங்கத்தை திருநங்கைகள் நையப்புடைத்துள்ளனர். படுகாயத்துடன் இருந்த தர்மலிங்கம் தானாக மருத்துவமனையில் அனுமதி ஆகி சிகிச்சை பெற்றுள்ளார்.
ஆனால், இறுதியில் தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழக்கவே, கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரேஸ்மிகா, மம்தா, கௌதமி, ரூபி, ஹார்னிகா ஆகிய 5 திருநங்கைகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான திருநங்கை கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.