×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தை வழியால் அலறிய போது செய்த கொடூரம்! கோவை சிறுமி வழக்கில் வெளியான திடுக்கிடும் ரகசியம்.... கைதி கார்த்தியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்து போன போலீஸ்..!!!

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தியின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்தி மற்றும் அவனுக்கு உதவியதாக கூறப்படும் நண்பன் மோகன்ராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்ய முயன்றபோது போலீசாரிடமிருந்து தப்பிக்க கார்த்தி மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதில் அவனுக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 6 வயதுசிறுமியை சாக்லேட் ஆசைகாட்டி அழைத்து சென்ற காமுகொடூரன்! அடுத்து நடந்த அதிர்ச்சியால் ஆற்றில் மிதந்த சடலம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!!

சாக்லேட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற கொடூரம்

காவல்துறையினரிடம் கார்த்தி அளித்த வாக்குமூலத்தின் படி, கடந்த 21-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளான். வழியிலேயே மிட்டாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, குளக்கரை பகுதிக்கு கூட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாகவும், குழந்தை வலியால் அலறியபோது பயந்துபோய் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் உடலை அங்கிருந்த முள் புதருக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளான்.

நண்பனிடம் உதவி கேட்ட கார்த்தி

கொலைக்குப் பிறகு கார்த்தி தனது நண்பன் மோகன்ராஜைச் சந்தித்து நடந்ததை கூறி உதவி கேட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து, குற்றவாளிக்கு உதவியதாக மோகன்ராஜ் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கினர். மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி உத்தரவின்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

தகவலின்படி, 22-ஆம் தேதி மாலை கண்ணம்பாளையம் குளம் அருகே சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. அதன் பின்னர் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் கார்த்தி பதுங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இந்த வழக்கு குறித்து பேசிய ஐஜி ரம்யா பாரதி, பாதிக்கப்பட்ட குடும்பம் அந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்து 20 நாட்களே ஆன நிலையில் இந்த துயரம் நடந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சம்பவத்தின் போது கார்த்தி எந்தவித போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை என்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளதாக கூறினார்.

கைது செய்யப்பட்ட இருவர்மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

 

இதையும் படிங்க: கோவை சிறுமி கொலை வழக்கில் முதல்வர் விஜய்யிடம்.... தாயார் எழுப்பிய கலங்க வைக்கும் கேள்வி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #சூலூர் #pocso #கார்த்தி #Tamil Nadu Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story