Illicit Affair: சித்தப்பாவுடன் கள்ளக்காதல்.. கணவரை பலி கொடுத்த மனைவி.. கோவையில் பதறவைக்கும் சம்பவம்.!
Coimbatore News Today: சித்தப்பா முறை கொண்டவருடன் ஏற்பட்ட பழக்கத்தால், மனைவி இந்திராணி தனது கணவர் ரித்திஷ் என்ற தேவாவை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டத்தை அதிரவைத்துள்ளது.
கள்ளக்காதலுக்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டத்தை சொந்தமாக கொண்ட தேவா என்ற ரித்திஷ் (வயது 27) கூலித்தொழிலாளி ஆவார். இவர் தற்போது குடும்பத்துடன் கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு பகுதியில் தங்கியிருந்தபடி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 27 வயதுடைய மனைவி இந்திராணி (26), 3 வயதுடைய ஆண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 26ம் தேதி தேவா மாயமாகியதாகவும், அதில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் தாய் சுசீலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சந்தேகத்திற்குரிய பதில்:
இதன்பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணையை தொடங்கியபோது, இந்திராணி தனது எப்போதும் சண்டையிட்டு அடிக்கடி வெளியே சென்றுவிடுவார். மீண்டும் சமாதானமாகி அவரே வருவார். தானும் கணவரை தேடி வருகிறேன். நீங்களும் தேடி தர வேண்டும் என நூதனமாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர், அங்கிருந்த கேமிராக்களை ஆய்வு செய்தனர். இந்த விசாரணை நடந்துகொண்டு இருந்தபோதே, காவல்நிலையத்துக்கு இந்திராணி நேரில் வந்து சரணடைந்தார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு சித்தப்பா மேல் மோகம்... கணவனுக்கு ஸ்கெட்ச்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்.!
கணவர் கொடூர கொலை:
அவரிடம் நடந்த விசாரணையில், "இந்திராணிக்கும், அவரின் சித்தப்பாவான வினோத் குமார் (வயது 41) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் இருந்துள்ளது. தேவா வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவிக்க, ஒருகட்டத்தில் இது தேவாவுக்கு தெரியவந்துள்ளது. அவர் இருவரையும் கண்டித்ததால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தேவாவை கொலை செய்ய கள்ளக்காதல் ஜோடி திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 28 அன்று தேவா வீட்டில் இருந்தபோது, வினோத் குமார் சில ஆட்களுடன் வந்து தகராறு செய்யும் போர்வையில் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.
சிக்கியது எப்படி?
பின் கரூரில் செயல்படும் ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு, உடலை கரூருக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு சடலத்தை ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கரூர் ரயில்வே காவல்துறையினர் தேவாவின் உடலை மீட்டு, அவர் தற்கொலை செய்தாரா? யார் அவர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். கிணத்துக்கடவு காவல்துறையினர் ஆம்புலன்ஸை சிசிடிவி ஆதாரத்துடன் கண்டுபிடித்ததால், எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் இந்திராணி நேரில் வந்து சரணடைந்து இருக்கிறார்" என்பது தெரியவந்துள்ளது.
தலைமறைவான வினோத் குமார் உட்பட அவரின் கூட்டாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.