×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5ம் வகுப்பு மாணவி பலாத்காரம் & கொலை.. கோவையில் பெரும் அசம்பாவிதம்.. மக்கள் போராட்டத்தால் பதற்றம்.!  

Coimbatore Girl Rape: 5ம் வகுப்பு பயிலும் 10 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். 

Advertisement

பள்ளி மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறும் விவகாரத்தால் கோவையில் மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு சிறுமி:

Kovai Girl Rape Murder: கோயம்புத்தூர் மாவட்டம் பள்ளபாளையம், பாரதிபுரத்தில் வசித்து வரும் தம்பதி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். தம்பதிக்கு 10 வயதுடைய மகள் இருக்கிறார். இவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக போத்தனூரில் இருந்து பாரதிபுரத்துக்கு குடிபெயர்ந்து இருக்கின்றனர். சிறுமி போத்தனூரில் செயல்படும் பள்ளியில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். 

இதையும் படிங்க: நெஞ்செல்லாம் பதறுதே.. உடலில் காயங்கள்., ரத்தக்கறையுடன் வீடு திரும்பிய 7 வயது சிறுமி.. தின்பண்டம் ஆசை காட்டி இளைஞர் செய்த கொடூரம்.!

வாலிபருடன் சென்ற சிறுமி:

அங்கிருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கி, ஐந்தாம் வகுப்புக்காக கண்ணம்பாளையம் பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் (மே 21) மாணவி இரவு 7 மணியளவில் அருகில் இருக்கும் கடைக்குச் செல்வதாக கூறி சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது, வாலிபர் ஒருவர் மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது.

கூலித்தொழிலாளியின் கொடூரம்:

பின் சம்பவம் தொடர்பாக உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, உடனடியாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, அதே பகுதியில் வசித்து வரும் தொழிலாளி கார்த்திக் (வயது 33) சிறுமியை அழைத்துச் சென்றது உறுதியானது. அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கிடைக்கவே, தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சாலை மறியல் போராட்டம்:

விசாரணையில் மாணவியை கார்த்திக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின் கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும், உடலை கண்ணம்பாளையம் குளத்தில் வீசியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து குளத்துக்குச் சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்-உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் செய்து வருகின்றனர்.

இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக கார்த்திக் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடருகிறது.

இதையும் படிங்க: #Breaking: விளாத்திகுளம் மாணவி வன்கொடுமை & கொலை விவகாரம்.. சிக்கலில் +2 மாணவர்.. பகீர் தகவல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Crime news #sexual abuse #5ம் வகுப்பு மாணவி #கோவை சிறுமி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story