×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு முதல்வரா? கோட்டைக்கு காலை 9.55-க்கு என்ட்ரி.... 4 மணிக்கு எக்ஸிட்! வரும்போதே கையில் லஞ்ச் பாக்ஸ்ஸும் கூட..எந்த பந்தாவும் இல்ல! முதலமைச்சர் விஜய்யை ஆச்சரியத்தில் பார்க்கும் அதிகாரிகள்..!!!

முதலமைச்சர் விஜய் நேர்த்தியான பணிமுறையும் எளிமையான அணுகுமுறையும் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய், தனது நேர்த்தியான பணிமுறையால் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளார். பதவியேற்ற நாள்முதல் அவர் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முன்கூட்டியே வருகை தந்து வருவது அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக அலுவலக பணிகளில் காட்டும் ஒழுங்கும் எளிமையும் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நிகழ்ச்சிகளுக்கு முன்கூட்டியே வருகை

கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்காக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காலை 8.48 மணிக்கே விஜய் வந்தடைந்தார். விழா காலை 10 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த அரசு நிகழ்வுக்காக, 8.45 மணிக்கே தலைமைச் செயலகத்தில் அவர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்ற நடவடிக்கைகளிலும் இதே நேர்த்தி தொடர்ந்தது. தேர்தல் மற்றும் முக்கிய வாக்கெடுப்பு நடைபெற்ற நாளில், காலை 9 மணிக்கே கோட்டைக்கு வந்த விஜய், 8.55 மணிக்கே அவைக்குள் நுழைந்தார். இதனால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளில் இருந்த அதிகாரிகள் மத்தியில் பரபரப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சற்று முன்.... விஜய் முதல்வர் பதவி பொறுப்பேற்றதும் பெண்களுக்காக விஜய் போட்ட முதல் கையெழுத்து இதுதான்! முழு திட்டங்கள் இதோ...!!!

அரசு ஊழியரைப் போல அலுவலக பணி

மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முதல் வழக்கமான கோப்புப் பணிகளில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று காலை சரியாக 9.55 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த அவர், தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டார். மாலை 4 மணி வரை பல்வேறு துறைகள் தொடர்பான கோப்புகள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

மதிய உணவிலும் எளிமை

விஜயின் அலுவலக பணிமுறையில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் அவரது Discipline தான். மதிய உணவை வீட்டிலிருந்தே கையோடு கொண்டு வந்திருந்த அவர், வெளியே செல்லாமல் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையிலேயே உணவருந்தினார். அதன்பின் மீண்டும் பணிகளில் ஈடுபட்டு, மாலை 4 மணிக்கு அன்றைய பணிகளை முடித்து இல்லம் திரும்பினார்.

மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும் எந்தவித பந்தாவும் இன்றி நேரம் கடைப்பிடித்து அலுவலகத்திற்கு வருவது, எளிமையாக செயல்படுவது ஆகியவை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசார் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜய் நெற்றியில் இருக்கும் அந்த கருப்பு பொட்டு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? கோட் - சூட்டிலும் இப்படி ஒரு விஷயம் இருக்காம்!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#CM Vijay #முதலமைச்சர் விஜய் #Tamil Nadu Secretariat #Discipline #நேர மேலாண்மை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story