கேக் வெட்டி கொண்டாடுற நிலைமையில் நா இப்போ இல்ல...எனக்கு கேக் வேண்டாம்! பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!!
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, பிறந்தநாள் கொண்டாட்ட கேக்கை திருப்பி அனுப்பியதாக முதல்வர் விஜய் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருவள்ளூரில் நிகழ்ந்த அம்மோனியா வாயு கசிவு விபத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்ட சிறப்பு கேக்கை திருப்பி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாநிலம் முழுவதும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் அன்னதானம், ரத்ததான முகாம்கள், கேக் வெட்டுதல் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொத்து கொத்தாக பலி.. அதிர்ச்சி சம்பவம்.!
இதற்கிடையில், தலைமைச் செயலகத்திலும் சிறப்பு கேக் ஒன்று வரவழைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு எந்தவித கொண்டாட்டமும் வேண்டாம் என முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிவு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப் பேர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் மொத்தம் 74 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 67 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு
ஏற்கனவே 5 பேர் உயிரிழந்திருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இந்த Ammonia Gas Leak சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்கும் மீட்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கும் அரசு கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அடிமேல் அடிவாங்கும் அதிமுக! தவெகவில் ஜெயகுமாரா? கசிந்த தகவலால் செம ஷாக்கில் எடப்பாடி..!!!