முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பில் சிறிய மாற்றம் ! அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பில் சிறிய மாற்றம் ! அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ வெளியீடு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் குறித்து அப்போலோ மருத்துவமனை இன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதயத் துடிப்பில் சிறிய மாற்றங்கள் இருந்ததால் தலைசுற்றல் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக இதய நிபுணர்கள் கொண்ட குழு ஆலோசனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பேரில் இன்று காலை முக்கியமான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குப் பின், முதலமைச்சருக்கு ஆஞ்சியோகிராம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகள் இயல்பாக இருப்பதுடன், எந்தவொரு சிக்கலும் இல்லையெனவும் மருத்துவமனைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னது.. பிக்பாஸ் சீசன் 9 தொடங்கவுள்ளதா! அரசல்புரசலாக வெளியான நியூ அப்டேட்! எப்போது ஆரம்பம்? ரசிகர்கள் ஆர்வத்தில்.....
தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆரோக்கியமாக உள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் அவர் வழக்கமான பணிகளை தொடரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.