×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா... இம்புட்டு விலையா? முதல்வர் விஜய்யின் ஆடையில் ஒளிந்திருக்கும் அந்த ஒரு ஸ்பெஷல் ரகசியம் .!!!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அணிந்திருந்த லூயிஸ் விட்டான் பெல்ட் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வெள்ளை சட்டை, கருப்பு நிற கோட் சூட்டுடன் தோன்றுவது வழக்கமாகியுள்ளது. அந்த தோற்றத்தின் ஒரு பகுதியாக அவர் அணிந்திருந்த Louis Vuitton பெல்ட் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

வைரலான பெல்ட்... என்ன சிறப்பு?

சர்வதேச அளவில் பிரபலமான லூயிஸ் விட்டான் நிறுவனத்தின் பெல்ட்டையே முதல்வர் விஜய் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் முகப்பில் இடம்பெற்றுள்ள நிறுவனத்தின் பிரத்யேக 'LV' வடிவமைப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஃபேஷன் ஆர்வலர்களும் இந்த பெல்ட்டின் விவரங்களை ஆர்வத்துடன் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: #Just In: கோட் சூட்டுடன் வீர நடையில் வந்த விஜய்....! கொண்டாட்டத்தில் நேரு ஸ்டேடியம்... வைரலாகும் லேட்டஸ்ட் லுக்..!!!

விலை மற்றும் வடிவமைப்பு

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள லூயிஸ் விட்டான் நிறுவனத்தின் பிரத்யேக பட்டறைகளில் இந்த பெல்ட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் ஆரம்ப விலை சுமார் ₹60,000 முதல் ₹1.14 லட்சம் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய் பயன்படுத்தியிருக்கும் மாடலின் விலை சுமார் ₹70,000 முதல் ₹1 லட்சம் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இரு பக்கமும் அணியக்கூடிய வசதி

இந்த பெல்ட்-இன் முக்கிய அம்சம், இதை இரு பக்கமும் மாற்றி அணிய முடிவதுதான். ஒரு புறம் லூயிஸ் விட்டானின் பாரம்பரிய டேமியர் அல்லது மோனோகிராம் கேன்வாஸ் வடிவமைப்பும், மறுபுறம் கருப்பு நிற ஃபார்மல் தோற்றமும் வழங்கப்பட்டுள்ளது. உயர்தர தோல் பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த பெல்ட் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் பல முன்னணி பிரபலங்களின் விருப்பத் தேர்வாக இருந்து வருகிறது.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜய் நெற்றியில் இருக்கும் அந்த கருப்பு பொட்டு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? கோட் - சூட்டிலும் இப்படி ஒரு விஷயம் இருக்காம்!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#joseph vijay #Louis Vuitton #தமிழக முதல்வர் #Luxury Belt #Fashion News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story