பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்த ஸ்மார்ட் போன்.... உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!
பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்த ஸ்மார்ட் போன்.... உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் போன் வெடித்து தீ பிடித்ததால் முதல்வர் காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் தீயில் கருகி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று சாப்பிட்டுக் கொண்டே உறவினருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது செல்போன் வெடித்து தீ பிடித்தது உறவினர்கள் தீயை அணைப்பதற்குள் வேகமாக பரவிய தீ அவரது கை கால் நெஞ்சு தாடை முகம் உள்ளிட்ட இடங்கள் தீயால் கருகியது.
இதனைத் தொடர்ந்து தீயை அணைத்து அவரை மீட்ட உறவினர்கள் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் இரவு முழுவதும் மொபைலை சார்ஜ் செய்து விட்டு காலையில் எடுத்து பேசியதால்தான் அதிக வெப்பமாகி செல்போன் வெடித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.