பணத்துக்கு பதிலாக 28 வயது பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த தாத்தா! விபரீத ஆசையால் வாங்கிய செருப்படி... வீடியோவை அனுப்பியதால் சிதம்பரம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!!!
சிதம்பரம் அருகே இளம்பெண்ணை கட்டையால் தாக்கிக் கொலை செய்த 64 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். தடுக்க முயன்ற பெண்ணின் தந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, இளம்பெண் ஒருவரை கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக 64 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலை தடுக்க முயன்ற பெண்ணின் தந்தையும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் கொடுக்கல் வாங்கலில் தொடங்கிய பழக்கம்
சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தியின் மனைவி காமாட்சி (28) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (64) ஆகியோருக்கு இடையே கடந்த சில காலமாக பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தகவலின்படி, அந்த அறிமுகத்தை பயன்படுத்தி மகேந்திரன், ஒரு மாதத்திற்கு முன்பு காமாட்சியை காட்டுமன்னார்கோவிலுக்கு வருமாறு கூறி உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனை செருப்பால் அடித்ததாகவும், அந்த நிகழ்வை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மீண்டும் இவ்வாறு நடந்துகொண்டால் வீடியோவை உறவினர்களிடம் அனுப்பிவிடுவதாக எச்சரித்துள்ளார். அதன்பின், இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வீடியோவை மகேந்திரனின் வாட்ஸ்அப் எண்ணுக்கும் அனுப்பியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்று வருட காதல்! உடனே கல்யாணம் செய்யனும்... மறுத்த பள்ளி மாணவி! அடுத்து நடந்த பயங்கரத்தால் பாட்டியையும் துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்..!!!
வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் காமாட்சியின் வீட்டிற்கு சென்ற மகேந்திரன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமான நிலையில், மறைத்து வைத்திருந்த கட்டையை எடுத்து காமாட்சியை தாக்கியதாக கூறப்படுகிறது.
தலையில் மற்றும் உடலின் பல இடங்களில் பலத்த காயமடைந்த காமாட்சி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலை தடுக்க முயன்ற அவரது தந்தை பாண்டுரங்கனையும் மகேந்திரன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த பாண்டுரங்கன் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பியோட முயன்றவர் கைது
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த காமாட்சியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து தப்பியோட முயன்ற மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொலைக்கான பின்னணி மற்றும் இதர விவரங்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பக்கத்து வீட்டுக்காரருடன் குஜாலாக இருந்த மனைவி! கணவனும் மகனும் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்.... ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக மாறிய வாழ்க்கை...!!!