×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்றோர்களே உஷார்.! வேகமாக பரவும் அம்மை நோய்.. குழந்தைகளை காப்பது எப்படி.?!

பெற்றோர்களே உஷார்.! வேகமாக பரவும் அம்மை நோய்.. குழந்தைகளை காப்பது எப்படி.?!

Advertisement

குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் சின்னம்மை நோய் அதிகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகும். தடுப்பூசி போடாத குழந்தைகளையே அம்மை நோய் எளிதில் தாக்குகிறது. சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதே அம்மை நோய் வராமல் தடுக்கும் மிகச் சிறந்த வழிமுறையாகும்.

அதிக காய்ச்சல், இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்து காணப்படுதல், தாடை அல்லது காதுகளுக்கு இடையே உமிழ்நீர் சுரப்பி வீக்கம், உடலில் சிறிய கொப்புளங்கள் தோன்றி நீர் கோர்த்துக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் அம்மை நோயின் அறிகுறிகள் ஆகும். அம்மை நோய் தாக்கிய முதல் 8 முதல் 12 நாட்களுக்கு பிறகு இந்த அறிகுறிகள் தென்படும்.

நோய் பாதிப்பு ஏற்பட்ட குழந்தையை மற்றவர்களுடன் பழக விடாமல் ஓய்வெடுக்க செய்ய வேண்டும். குழந்தையின் படுக்கை விரிப்புகள் மற்றும் உடைகளை கிருமி நாசினி கலந்த நீரைக் கொண்டு அலசி தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: முதல் சிக்னல் கொடுப்பது விரல்களின் நகம்தான்! இப்படியெல்லாம் இருந்தால் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்!

காய்ச்சல் குறைந்த பிறகு குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைகொடுக்க வேண்டும்.

மசித்த உணவுகள் மற்றும் குறைந்த உப்பு சேர்த்த உணவுகளை அளிக்கலாம். சமையலில் எண்ணை அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். மாதுளை, கருப்பு திராட்சை, ஆரஞ்சு போன்ற பழச்சாறுகளை கொடுப்பது மிகவும் நல்லது.

கண்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் கொப்புளங்கள் தென்பட்டாலோ , மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலோ மருத்துவரை உடனடியாக அணுகி ஆலோசனை பெற வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது தகுதியான மருத்துவர்களை அணுகுவது பாதுகாப்பானது. சுய மருத்துவம் செய்வதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மக்களே உஷார்.. அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ கண் தொற்று.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chickenpox #Monkeypox #tamilnadu #அம்மை நோய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story