சென்னையில் ஆசைக்கு இணங்க மறுத்த அத்தையை மருமகனும் அவரது நண்பரும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு(60). இவரது மனைவி வேளாங்கண்ணி(55), இந்த தம்பதியினருக்கு மரியம் லாசர் என்ற மகன் இருக்கிறான். அன்பு இரும்பு கம்பெனி ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணிக்கு மகன் லாசர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்போது தாய் வேளாங்கண்ணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் காவல் துறையை தொடர்பு கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வேளாங்கண்ணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வேளாங்கண்ணியின் தம்பி மகன் அகஸ்டின் அருண் தனது நண்பருடன் இவர்களது வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு அகஸ்டின் அருணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அகஸ்தியன் அருளும் அவரது நண்பர் சாலமன் இருவரும் சேர்ந்து வேளாங்கண்ணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அகஸ்டின் அருண் மற்றும் அவரது நண்பர் சாலமன் இருவரும் அத்தை வேளாங்கண்ணியின் வீட்டிற்கு சென்ற போது தனிமையிலிருந்த அவரைப் பார்த்து பாலியல் ஆசை வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அகஸ்டின் அருண் தப்பான நோக்கத்துடன் அத்தையின் தோள்பட்டையில் கை வைத்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது அத்தை அகஸ்டின் அருணை திட்டியதோடு அவரது பெற்றோரிடமும் கூற போவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அகஸ்டின் அருண் வேளாங்கண்ணியின் தலையைப் பிடித்து தரையில் கொடூரமாக தாக்கியதோடு அருகில் இருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து அவரது கழுத்தில் குத்தி கொடூரமாக படுகொலை செய்தார். மேலும் இதனை காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அகஸ்டின் அருண்(21) மற்றும் நண்பன் சாலமன் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.