×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: தரையிரங்க முடியாமல் நடுவானில் தவித்த விமானம்! சென்னையில் திடீரென சூழ்ந்த கார்மேகம்.... விமான நிலையத்தில் பரபரப்பு...!!!

சென்னையில் திடீர் வானிலை மாற்றம் மற்றும் பலத்த சூறைக்காற்றால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத்-சென்னை விமானம் திருப்பதிக்கு மாற்றி தரையிறக்கப்பட்டது.

Advertisement

சென்னையில் இன்று திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், நகரின் பல பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான காலநிலை நிலவி வருகிறது. குறிப்பாக மீனம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் வானிலை வேகமாக மாறியதால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

தகவலின்படி, ஹைதராபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் விமானம், மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வட்டமிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நிலைமை சீராகாததால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானம் திருப்பதி விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

இதையும் படிங்க: இன்று இரவு இந்த 23 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....!!!

அதன்பின் விமானம் திருப்பதியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சில நேரம் பயணிகள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மெரினாவில் பலத்த புழுதிக்காற்று

இதற்கிடையில், இன்று காலை முதலே மெரினா கடற்கரை பகுதியில் பலத்த புழுதிக்காற்று வீசி வருகிறது. கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் நகர்ந்தனர்.

சென்னையின் பல பகுதிகளில் தற்போது கார்மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில இடங்களில் மழை பெய்யும் சூழலும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. திடீர் வானிலை மாற்றம் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai weather #Flight diverted #சென்னை விமான சேவை #Tirupati airport #மெரினா கடற்கரை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story