×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை மக்களே உஷார்.. கொளுத்தியெடுக்கும்போகும் வெயில் & வெப்ப அலை.. வானிலை அலர்ட்.!

TN Weather Update: தமிழ்நாடு வானிலை நிலவரம் 21 மே 2026 இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நாளைய வானிலை குறித்த தகவலை தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

தமிழக அளவில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பான தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல காற்றழுத்த தாழ்வுபாதை:

தமிழகம், புதுவை மற்றும் காணக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையில், வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தமட்டில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்.!

மழைக்கு வாய்ப்பு:

இதனால் 21-05-2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-05-2026 அன்று சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23ல் 7 மாவட்டங்களில் மழை: 

23-05-2026 அன்று திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். 27-05-2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.

வெப்ப எச்சரிக்கை:

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பில், 21-05-2026 முதல் 25-05-2026 வரை உள் தமிழக பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும். 21-05-2026 மற்றும் 22-05-2026 வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 23-05-2026 அன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையும் புறநகர் பகுதிகளான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (21-05-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்தடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41-42° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (22-05-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்தடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். மாலை / இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 41-42° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிங்க: இன்றைய வானிலை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இங்கே.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai weather #Tomorrow Weather #Chennai IMD #நாளைய வானிலை #வெயில்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story