தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவரை பிரிந்த துணை நடிகையிடம் குடித்தனம் நடத்தி இலட்சங்களை சுருட்டிய காதல் சுகுமார்.. பெண் புகார்.!

கணவரை பிரிந்த துணை நடிகையிடம் குடித்தனம் நடத்தி இலட்சங்களை சுருட்டிய காதல் சுகுமார்.. பெண் புகார்.!

Chennai Vadapalani Actress Complaint Against Kadhal Movie Fame Sukumar on Cheating  Advertisement


சென்னை வடபழனியில் வசித்து வரும் கணவரை பிரிந்த 36 வயது பெண், குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் காதல், விருமாண்டி, காதல் அழிவதில்லை உட்பட பல படங்களில் நடித்த சுகுமார் மீது அதிர்ச்சி புகார் அளித்திருந்தார். அதாவது, ஒருசில படங்களில் துணை நடிகையாக நடித்த பெண்ணுக்கும் - சுகுமாருக்கும் இடையே குறும்படத்தில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் காதலை ஏற்படுத்தி இருக்கிறது.

இருவருக்கும் இடையேயான பழக்கம் பின்னாளில் நெருக்கத்தை ஏற்படுத்த, பெண்ணை நலமா? சாப்பிட்டீங்களா? என ஆசையாக பேசுவதுபோல நடித்து மதில் இடம்பிடித்து இருக்கிறார். நடிகையின் நம்பர் கிடைத்த மறுநாளில் இருந்து நண்பராக பேசி வந்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக பெண்மணி கணவரை பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வருகிறார். 

ஒரே வீட்டில் குடித்தனம்

சினிமாவில் வாய்ப்பு கொடுக்கிறேன் என அன்பாக பேசியவர், பின்னாளில் பெண்ணை தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார். காதலாகி கோத்தகிரி, ஊட்டி என அழைத்துச் சென்றவர், எனக்கும் திருமணமாகி விவகாரத்தாகிவிட்ட காரணத்தால், நாம் திருமணம் செய்யலாம் என பேசி இருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளாக பெரம்பூரில் இருந்தவர்கள், பின் வடபழனியில் வீடு எடுத்து தங்கி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: சென்னை: மாடிச்சுவரில் அமர்ந்து போன் பேசியதால் விபரீதம்; 24 வயது இளைஞர் தவறி விழுந்து பலி.!

chennai

வீடு பணம், வாடகை என அனைத்தையும் பெண்ணிடம் பெற்றுக்கொண்டவர், ஒருகட்டத்தில் தாலிகட்டி திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. எங்கு திரைத்துறை நிகழ்ச்சிக்கு சென்றாலும், நடிகையை மனைவி என கூறி அறிமுகம் செய்து இருக்கிறார். இதனிடையே, லோன் என நடிகையின் கால்களில் விழுந்து கண்ணீர் வடித்து சுகுமார் பணத்தையும் பறித்து இருக்கிறார். நகை, பணம் என அனைத்தையும் இழந்த நடிகை, தற்போது சுகுமார் தன்னை மோசடி செய்துவிட்டதாக புகார் அளிக்கிறார். 

பணம் பறிப்பு

நகை அடமானம், வட்டிக்கு கடன் வாங்கி என மொத்தமாக ரூ.7 இலட்சம் பணத்தை இழந்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் சுகுமார் தலைமறைவாகவே, அவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டு, நடிகையை தனக்கு 35 வயது என சொல்லி ஏமாற்றியது தெரியவந்தது. உண்மையில் சுகுமாருக்கு 50 வயது ஆகிறது. 3 ஆண்டுகளாக நடிகையை ஏமாற்றியவர், அவரை கைவிட்டு சென்றுள்ளார். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முன்னதாக, கடந்த மாதம் அவர் வடபழனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சுகுமாரை அதிகாரிகள் பெயரளவுக்கு விசாரணை செய்து விட்டுவிட்டதாகவும், அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தற்போது நடிகை கோரிக்கை வைத்து புகார் மனு அளித்துள்ளார். 
 

இதையும் படிங்க: #BigBreaking: ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சக்கட்டம்.. ரூ.60,200/-க்கு விற்பனை.! நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Vadapalani #Kadhal sukumar #சென்னை #வடபழனி #காதல் சுகுமார்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story