×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் கணவனுக்கு துரோகம்.. சி.டி கடைக்கு கஞ்சா மேல் ஆசை, கஞ்சாவுக்கு ரியாஸ் மேல் ஆசை.! நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்.!

காதல் கணவனுக்கு துரோகம்.. சி.டி கடைக்கு கஞ்சா மேல் ஆசை, கஞ்சாவுக்கு ரியாஸ் மேல் ஆசை.! நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்.!

Advertisement

கள்ளக்காதல் வயப்பட்ட காதல் மனைவி, காதல் கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய சம்பவம் நடந்துள்ளது. காதல் கணவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் பரிதாப சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சென்னையில் உள்ள தீவுத்திடல், அன்னை சத்யா நகர் பகுதியை சார்ந்தவர் அக்பர் பாஷா (வயது 28). பாஷா சி.டி கடை வைத்துள்ளார், சீன பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தும் வந்துள்ளார். இவர் அப்பகுதியை சார்ந்த கஞ்சா வியாபாரியான நாகவல்லி என்ற பெண்மணியை காதலித்து வந்த நிலையில், அவரை யாஸ்மின் பானுவாக மாற்றி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நாகவல்லிக்கு ரியாஸ் என்ற நபருடன் தொடர்பு இருந்துள்ளது. 

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அக்பர் பாஷாவுக்கு தெரியவரவே, தம்பதிகளுக்கு இடையே தகராறு எழுந்துள்ளது. அவ்வப்போது தகராறும் நடைபெற்று வந்த நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட யாஸ்மின் பானு முடிவெடுத்துள்ளார். கணவரை கொலை செய்ய எருக்கஞ்சேரியை சார்ந்த தாரணி என்ற பெண்ணின் உதவியையும் நாடியுள்ளார். 

தாரணி தனது கணவரிடம் அக்பர் பாஷாவை கொலை செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்ளவே, தாரணி அடியாட்களை தயார் செய்து கொடுத்து, கூலிப்படை ஏவி கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கு ரூ.1 இலட்சம் பணம் தரவும் யாஸ்மின் பானு ஒப்புக்கொண்டுள்ளார். முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

கூலிப்படையை சார்ந்த 2 பேரிடம் அக்பர் பாஷாவை அடையாளம் காண்பித்த நிலையில், அவர்கள் முத்துசாமி பாலம் அருகே வருகையில் அக்பர் பாஷாவை வழிமறித்து தாக்கியுள்ளனர். கத்தி, அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்தால் தாக்குதல் நடந்த நிலையில், பலத்த வெட்டுக்காயத்துடன் அக்பர் பாஷா அலறியுள்ளார். 

இதனைக்கண்டு பொதுமக்கள் விரைந்து வந்ததால், 2 பேர் கும்பல் தப்பி சென்றுள்ளது. காயமடைந்து இருந்த அக்பர் பாஷா சிகிச்சைக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பூக்கடை காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து கூலிப்படைக்கு வலைவீசியுள்ளனர். 

மேலும், கணவன் - மனைவி சண்டையும் விசாரணையில் தெரியவந்ததால், யாஸ்மின் பானுவிடம் அதிகாரிகள் விசாரணை செய்த போது கூலிப்படை ஏவப்பட்ட சம்பவம் உறுதியானது. இதனையடுத்து, யாஸ்மின் பானுவை கைது செய்த அதிகாரிகள், அவரது வாக்குமூலத்தின் பேரில் தாரணியையும் கைது செய்தனர்.

கூலிப்படையை சார்ந்த அப்பு மட்டும் சரவணன் ஆகியோரையும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், அப்பு மட்டும் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டார். சரவணனுக்கு காவல் துறையினர் வலைவீசியுள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #TheevuThidal #tamilnadu #murder attempt #police #Affair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story