×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பர்த்டேவில் நடந்த சோகம்.. ரூ.3,000 கடனுக்காக கல்லால் தாக்கி துள்ளத்துடிக்க கொடூர கொலை.. சென்னையில் ஷாக்.!

Chennai News: ரூ.3000 கடனுக்காக நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு சென்று வந்தவர் கொலை சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெயிண்டர்:

சென்னையில் உள்ள காரப்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஜீவா (வயது 27). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் 21ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட, நண்பர் ஆனந்தராஜுடன் மதுபானம் அருந்தி இருக்கிறார். பின் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

வாக்குவாதம் & கொலை:

இந்த வாக்குவத்தைத்தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கி இருக்கின்றனர். ஆனந்தராஜ் ஜீவாவை கீழே தள்ளி சாலையோரம் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஜீவா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராட, அவ்வழியாக சென்ற மக்கள் அவசர ஊர்தியில் மீட்டு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது.

ஆத்திரத்தில் நடந்தது:

இதனையடுத்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சேலத்தில் தலைமறைவாக இருந்த ஆனந்தராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ஜீவா என்னிடம் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கினார். அதனை திருப்பி கேட்டபோது தாமதம் செய்து வந்தார். பிறந்தநாளுக்கு மதுஅருந்த சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் கல்லால் தாக்கியதில் அவர் இறந்திவிட்டார் என தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த நபர்.. கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chennai News #Murder #பிறந்தநாள் கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story