×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவரின் சடலத்துடன் 2 நாட்கள் இருந்த மனைவி.. ரத்தம் சொட்ட சொட்ட அரங்கேறிய பயங்கரம்.!

சென்னையில் கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி, இரண்டு நாட்கள் சடலத்தை வீட்டில் வைத்திருந்து பின்னர் சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவரை கொன்ற பெண், சடலத்தை மறைக்க சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய பயங்கரம் நிகழ்ந்த்துள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா நகர் கிழக்கு பிளாக் 29வது தெருவில் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் ரத்தக்கறை படிந்த நிலையில் சாக்கு மூட்டை ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா நகர் போலீசார் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் சடலமாக இருந்துள்ளது.

கால்வாயில் ரத்தக்கறையுடன் கிடந்த சாக்கு மூட்டை:

இதனை அடுத்து அவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், சாக்கு மூட்டையை கட்டி இங்கு கொண்டு வந்து போட்டது யார்? உயிரிழந்தவர் யார்? கொலைக்கு காரணம் என்ன? என்பது தொடர்பான விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நள்ளிரவு நேரத்தில் பெண் ஒருவர் சாக்கு மூட்டையை இழுத்துச் சென்று கால்வாயில் வீசுவது பதிவாகியிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!

விசாரணையில் வெளிவந்த உண்மை:

அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், அண்ணாநகர் கிழக்கு அன்னை சத்யா நகரை சேர்ந்த அம்பிகா (57) என்ற பெண் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் அம்பிகா, தனது கணவர் மதுபோதையில் அடிக்கடி தொல்லை கொடுத்ததால் இந்த கொலையை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். 

சடலத்தை மறைக்க முயற்சி:

நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த சந்தானம், மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று மதுபோதையில் வீடு திரும்பியவர் தகராறு செய்ததால், ஆவேசமடைந்த அம்பிகா கணவரை ரத்தம் சொட்ட சொட்ட கத்தியால் குத்தி கொன்றதாகவும், இரண்டு நாட்கள் சடலத்தை வீட்டிலேயே வைத்திருந்த நிலையில் என்ன செய்வது என தெரியாமல் இறுதியில் சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Wife killed husband #சென்னை #கணவர் கொலை #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story