×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Advertisement

காற்று மாறுபாட்டின் காரணமாக இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக 24 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

25 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அடுத்து 24 மணிநேரத்தை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #tamilnadu #Chennai RMC #சென்னை #தமிழ்நாடு #வானிலை நிலவரம்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story