×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10 மணிமுதல் 21 மாவட்டங்களில் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

10 மணிமுதல் 21 மாவட்டங்களில் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Advertisement

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் கன்னியாகுமரி, தர்மபுரி உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, இராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #rain #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story